தமிழ்நாட்டில் இன்று 1652 பேருக்கு கொரோனா உறுதி : 2314 பேர் டிஸ்சார்ஜ்

0 3252

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் ஒருநாள் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. 

புதிதாக 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில், 2,314 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 18 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 492 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 170 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெரம்பலூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments