சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு; மாவோயிஸ்ட்டுக்கு ஆயுத சப்ளை செய்யும் கும்பலிடமிருந்து துப்பாக்கி வாங்கியிருக்கலாம் என தகவல்

0 1320
சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு; மாவோயிஸ்ட்டுக்கு ஆயுத சப்ளை செய்யும் கும்பலிடமிருந்து துப்பாக்கி வாங்கியிருக்கலாம் என தகவல்

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மாவோயிஸ்ட்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் கள்ள துப்பாக்கி கும்பலிடம் வாங்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 11ம் தேதி தலில்சந்த் - புஷ்பா பாய், ஷீத்தல் ஜெயின் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஷீத்தல் ஜெயினின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், உறவினர்கள் ரபீந்திரநாத்கர் மற்றும் விஜய் உத்தமை புனேயில் வைத்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகளில் ஒன்று மாவோயிஸ்ட்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் கும்பலிடம் வாங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து 3 பேரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments