தீபாவளியையொட்டி டெல்லியில் காற்று மாசு பாதுகாப்பான அளவை விட 8 மடங்கு மாசு அதிகரிப்பு

0 845
தீபாவளியையொட்டி டெல்லியில் காற்று மாசு பாதுகாப்பான அளவை விட 8 மடங்கு மாசு அதிகரிப்பு

தீபாவளியையொட்டி டெல்லியில் காற்று மாசு பாதுகாப்பான அளவை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அண்மைக்காலமாக டெல்லியில் காற்று தீவிர மாசுபாட்டு நிலையில் இருந்தது. இதனால் நவம்பர் 10 முதல் 30 வரை அனைத்து நகரங்களிலும் வெடிகள் விற்பனைக்கும், வெடிகள் கொளுத்துவதற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.

இந்நிலையில் டெல்லியில் தீபாவளியன்று தடையை மீறிப் பொதுமக்கள் வெடிகளைக் கொளுத்தியதால் காற்று மாசு மேலும் அதிகரித்தது.

இரவெல்லாம் வெடி கொளுத்தியதால் இன்று காலையில் மாசுபாடு கடுமையாக அதிகரித்துப் பாதுகாப்பான அளவைவிட எட்டுமடங்கு உயர்ந்தது.

இதேபோல நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பல நகரங்களிலும் தீவிர மாசுபாடு என்னும் அளவுக்குக் காற்றின் தரம் மோசடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments