எத்தியோப்பியா போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சம்

0 1494
எத்தியோப்பியா போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சம்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் மூண்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

டைக்ரே மாகாணத்தில் அரசுக்கும், போராளிக்குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், எல்லையில் உள்ள டெகெஷே நதியைக் கடந்து சூடானின் ஹம்தயாத் நகரில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments