சுரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்- மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

0 2459
சுரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்- மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்து, ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது” என்று துணை வேந்தர் சுரப்பா மீதும் - அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறியுள்ள மு.க. ஸ்டாலின், அந்த இருவரையும் முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments