”கனமழை பாதிப்பு குறித்து நேரலை” பாலம் தகர்ந்தும் பதட்டமடையாத செய்தியாளர்..!

0 11079
”கனமழை பாதிப்பு குறித்து நேரலை” பாலம் தகர்ந்தும் பதட்டமடையாத செய்தியாளர்..!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து நிருபர் ஒருவர் நேரலை செய்துகொண்டிருந்தபோது அவர் நின்றிருந்த பாலம் இரண்டாக பிளக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அலெக்ஸாண்டர் கவுண்டி பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இது குறித்து, ஹிட்டனைட் பாலத்தில் நின்றவாறு ஆம்பெர் ராபர்ட்ஸ் என்ற செய்தியாளர், நேரலையில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் நின்றுகொண்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென தகர்ந்து விழுந்தது. அப்போதும் அதிர்ச்சியடையாத அவர் தொடர்ந்து நேரலையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments