அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்த டொனால்டு டிரம்ப்

0 3695
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்த டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்குச் சற்று இறங்கி வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் ஜனவரி 20ஆம் நாள் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார். ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததுடன், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ, எந்த ஆட்சி நடக்குமோ என யார் அறிவார் என்றும், காலம்தான் அதற்குப் பதில் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments