திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 3ஆம் நாள் விழா : கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்

0 406
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 3ஆம் நாள் விழா : கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளில் முத்துப் பந்தல் வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

இக்கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3ஆம் நாளான இன்று கோயில் வளாகத்தில் உள்ள வாகன மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்துப்பந்தல் வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயார் அருள்பாலித்தார்.

இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments