ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் : சிம்புவுக்கு நேரில் சம்மன் வழங்க வனத்துறை முடிவு

0 1499

ஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு வனத்துறையினர் நேரில் சம்மன் வழங்க உள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தில், சிம்பு தனது கையால் பாம்பு பிடிப்பது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.

இது தொடர்பாக  நடிகர் சிம்பு, இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் பாலாஜி காப்பா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்காமல் செய்தி அறிக்கை போன்ற விளக்கத்தை சுசீந்திரன் அளித்தார். இதனால் மூவருக்கும் நேரில் சம்மன் அளிக்க வனத்துறை முடிவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments