கொரோனா சூழலில் இருந்து மீட்சியடையும் நேரத்தில் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 2240
கொரோனா சூழலில் இருந்து மீட்சியடையும் நேரத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா சூழலில் இருந்து மீட்சியடையும் நேரத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். கொரோனா சூழலில் இருந்து மீட்சியடையும் வேளையில், புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில், மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அக்டோபரில் இருந்து தொடங்கும் இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments