கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

0 952
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நேரில் ஆய்வு நடத்துகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 268 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளில் 60 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பிலான 36 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments