பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை...ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என எதிர்பார்ப்பு

0 1026
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை...ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என எதிர்பார்ப்பு

பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 55 மையங்கள் அமைக்கப்பட்டு 414 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும், நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்படும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments