அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே மர்ம படகு ஒன்று இந்திய கடலோர காவல்படையினரால் சுற்றிவளைப்பு

0 3039
அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே மர்ம படகு ஒன்று இந்திய கடலோர காவல்படையினரால் சுற்றிவளைப்பு

அந்தமான்-நிகோபார் தீவுகள் அருகே கடல் பகுதியில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 12 பேருடன் வந்த மர்ம படகை கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். 

அந்தமான்-நிகோபார் தீவுகள் அருகே உள்ள கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சந்தேகப்படும்படி படகு ஒன்று வருவதை கண்டுபிடித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர காவல்படையினர் கப்பலில் சென்று அந்த படகையும், அதிலிருந்த 12 மியான்மர் நாட்டினரையும் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து போர்ட் பிளேருக்கு படகையும், அதிலிருந்தோரையும் கடலோர காவல்படையினர் கொண்டு சென்றுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments