உலகமயமாதலை போல நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைதலும் முக்கியம் - பிரதமர் மோடி

0 906
உலகமயமாதலை போல நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைதலும் முக்கியம் - பிரதமர் மோடி

உலகமயமாதலை போல நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைதலும் மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 டெல்லி ஐ.ஐ.டியில் நடைபெற்ற 51 வது பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், கொரோனா தொற்று பரவல் காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகம் கை கொடுத்துள்ளது என்றார்.

பல செயல்களை மேற்கொள்ளும் முறைகள் இப்போது மாறி உள்ளதாக அவர் கூறினார். கொரோனா காலம் பல  பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், உலகமயமாதல் எத்தனை முக்கியமோ, அந்த அளவுக்கு நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைதல் மிக முக்கியமென்றார்.

சுயசார்பு இந்திய இயக்கம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்குமென அவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் எளிதாக தொழில் தொடங்க  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments