தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஏற்பாடு- அமைச்சர் மாபா பாண்டியராஜன்

0 1748
தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஏற்பாடு- அமைச்சர் மாபா பாண்டியராஜன்

தமிழகத்தில் பணிபுரியும் தமிழ் தெரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணி உலக தமிழாராய்சி நிறுவனத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் செய்தி பலகையில் தினம் ஒரு தமிழ் சொல் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அருங்காட்சியகம் வெகு விரைவில் செயல் வடிவத்தில் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments