அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் 10-ந்தேதி முதல் திறக்க அனுமதி

0 657

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் 10-ந்தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும், ஆடியோ வழிகாட்டிகளை பயன்படுத்த தடை என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தூக்கி பயன்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments