ஆபாச பட ஷூட்டிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டே, கணவர் சாம் பாம்பே ஜாமீனில் விடுவிப்பு

0 2368
ஆபாச பட ஷூட்டிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டே, கணவர் சாம் பாம்பே ஜாமீனில் விடுவிப்பு

கோவாவில் ஆபாச பட ஷூட்டிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டே, கணவர் சாம் பாம்பே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கனகோனாவிலுள்ள அணையில் ஆபாசப் பட ஷூட்டிங் எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 2 பேருக்கும் அனுமதியில்லாமல் கோவாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் நடைபெற்ற இடத்துக்கு பாதுகாப்பு கொடுத்ததாக ஆய்வாளர் உள்ளிட்ட 2 போலீசாரும், ஷூட்டிங்குக்கு அனுமதியளித்ததாக 6 நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments