வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி

0 5061
வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி

வாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, வாட்ஸப் செயலியின் 10 லட்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த வசதியை 2 கோடி பயனாளர்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் செயலி, ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments