இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே இன்று எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை

0 561
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே இன்று எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண இந்தியா -சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

இந்தியாவின் சூசல் பகுதியில் காலை 9.30 மணிக்கு இப்பேச்சுவார்த்தை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. ஏப்ரல் மாதத்தின் நிலவரத்தின்படி படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ உயரதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்- சீன அமைச்சர் இடையேயான 5 அம்ச உடன்படிக்கைக்குப் பின், ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காண்பதற்கான நெருக்குதல் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments