தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

0 7474
தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென அவர் கூறினார்.

மக்கள் மாசில்லாத தீபாவளியை கொண்டாடி நாட்டிற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments