பாஜக சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

0 8189
பாஜக சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

நாளை முதல் துவங்குவதாக இருக்கும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க இயலாது என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி மனுக்கள் வந்தால் சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்க மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்று தெரிவித்தார். திருவள்ளூரில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக அளித்த மனுவில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்கிற விவரங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

100 பேர் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், கொரோனாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஜய் நாராயணன் கூறியுள்ளார். இந்த தகவல் யாத்திரைக்கு அனுமதி கோரிய பாஜக தரப்பிடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எந்த தடை வந்தாலும் வேல் துள்ளி வரும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு கூறியதை தொடர்ந்து எல்.முருகன் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments