திருப்பதி: இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன் வழங்க ஏற்பாடு

0 1414
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த திங்கள் முதல் தினமும் 3ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் வெளிமாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், கொரோனா பரவும் அச்சம் நிலவியதை தொடர்ந்து இந்த புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

அன்றைய தின முடிவுக்குப் பின்னர், அடுத்த நாளுக்கான டோக்கன் உடனடியாக வழங்கப்படுவதாகவும், பக்தர்கள் தங்குவதற்கு விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை சில நாட்களில் வாடகைக்கு விடப்படுவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments