அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்..!

0 21288

 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

முன்னணி - 451/538

ஜோ பைடன்

டொனால்ட் டிரம்ப்

238

213

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் விவரங்கள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி அதிபர் டிரம்ப், நெப்ராஸ்கா, லூசியானா, வடக்கு டகோடா, தெற்கு டகோடா, வியோமிங், இன்டியானா, அர்கான்சாஸ், கான்சாஸ், மிசோரி, இடாகோ, உடாவா, ஒகியோ, புளோரிடா, டெக்சாஸ், அய்யோவா , மாண்டானா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் நியூ மெக்சிகோ, நியூயார்க், மாசாசூட்ஸ், கொலராடோ, டிஸ்ரிக் ஆப் கொலம்பியா, நியூ ஹாம்சையர், கலிபோர்னியா, ஓரேகான், வாஷிங்டன், வெர்ஜினியா, ஹவாய், மின்னசோட்டா ஆகிய இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு 270 வாக்குகள் தேவையாகும். ஆனால் இதுவரை 2 பேருக்கும் அத்தனை வாக்குகள் இன்னும் கிடைக்கவில்லை. இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடனுக்கு 238 வாக்குகளும், டிரம்புக்கு 213 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இருவர் இடையேயும் குறைவான வாக்குகள் வித்தியாசமே இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேரம் என்பதால் வாக்குகளை காலையில் எண்ணினால் போதும் என தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments