அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? அமைப்பு ரீதியான தகவல்கள்

0 3452
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? அமைப்பு ரீதியான தகவல்கள்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதற்கான முடிவுகள்  வெளியாக உள்ள நிலையில், அந்நாட்டின் அமைப்பு ரீதியான சில தகவல்களை தற்போது காணலாம்.

உலக வல்லரசு நாடான அமெரிக்கா 98 லட்சத்து 33 ஆயிரத்து 512 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய மூன்றாவது நாடாகும்.

ஆங்கிலமே பிரதானமாக உள்ள இந்நாட்டில், 36 கோடியே 60லட்சம் பேர் வசிக்கின்றனர். இதன் மூலம், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெள்ளையினத்தவர் 77 சதவிகிதம் பேரும், கருப்பினத்தவர் 14 சதவிகிதத்தினரும் மற்றும் ஆசியர்கள் 6 சதவிகிதம் பேரும் உள்ளனர்.

50 மாநிலங்களை கொண்ட அந்நாட்டில், அலாஸ்கா பெரிய மாநிலமாகவும், நியூயார்க் பெரிய நகரமாகவும் உள்ளது. பென்சில்வேனியா, விஸ்கான்சின், புளோரிடா, அரிசோனா ஆகிய மாநிலங்கள், அதிபர் தேர்தலில் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களாக உள்ளன.

அமெரிக்காவில் 23 கோடியே 92 லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவை போல பல கட்சி ஆட்சி முறை அங்கு இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தியாவில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை போலவே அமைப்பை கொண்டுள்ள, அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை 435 உறுப்பினர்களையும், செனட் சபை 100 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments