’தமிழ்நாட்டு மண்... ஆனால், பெல்ஜியம் தொழில்நுட்பம்’ - மானாமதுரை மண்பாண்ட கலைஞரின் அசத்தல் படைப்பு '

0 13957
மண்பாண்ட கலைஞர் ரமேஷ்

பெல்ஜியம் நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான தண்ணீர் கலனைப் பார்த்து, நம் ஊர் மண்பாண்ட கலைஞர் ஒருவர் அதே மாதிரி தயாரித்து அசத்தியுள்ளார். பெல்ஜியம் மண்பாண்ட தண்ணீர் கலனைத் தற்போது பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் கேசவன். மண்பாண்ட கலைஞரான கேசவன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சிறந்த மண்பாண்ட கலைஞருக்கான விருது பெற்றுள்ளார். கேசவனின் மனைவி மீனாட்சியும் கடம் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர். இவரும் சங்கீத் நாடக அகாடமி விருதைப் பெற்றுள்ளார். கேசவன் - மீனாட்சி தம்பதியின் மகன் ரமேஷும் தற்போதும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். இசைக்கலைஞர்கள் பயன்படுத்தும் கடம் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்று வருகிறார் ரமேஷ்.

ஒரு வருடத்துக்கு முன்பு, தமிழகம் வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர், கடம் வாங்குவதற்காக ரமேஷிடம் வந்துள்ளார். அப்போது, பெல்ஜியம் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் கலன் ஒன்றைக் காட்டி, அதே வடிவத்தில், அதே போன்று களி மண்ணால் செய்து தர முடியுமா? என்று ரமேஷிடம் கேட்டுள்ளார். பெல்ஜியம் நாட்டுத் தண்ணீர் கலனைப் பார்த்து அதே போன்று துல்லியமாக ரமேஷ் தண்ணீர் கலன் செய்து கொடுத்துள்ளார். இதனால், பெரு மகிழ்ச்சியடைந்த அந்த பெல்ஜியம் இசைக்கலைஞர் களிமண்ணால் உருவான தண்ணீர் கலனைத் தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து, தான் கற்ற பெல்ஜியம் தொழில்நுட்பத்திலான தண்ணீர் கலனைத் தயாரித்து தமிழகத்திலும் விற்பனை செய்து வருகிறார்.

ரமேஷ் உருவாக்கிய பெல்ஜியம் தொழில் நுட்பத்திலான தண்ணீர் கலன் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments