தமிழகத்தில் வரும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

0 31335
தமிழகத்தில் வரும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

தமிழகத்தில் வருகிற 4, 5-ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய  மிதமான மழையும், சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments