இடஒதுக்கீடு கேட்டு குர்ஜார் சமூக மக்கள் மீண்டும் போராட்டம்: 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிப்பு

இடஒதுக்கீடு கேட்டு குர்ஜார் சமூக மக்கள் மீண்டும் போராட்டம்: 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிப்பு
ராஜஸ்தானில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி குர்ஜார் இனத்தவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் குர்ஜார் உள்ளிட்ட 5 சமூகத்தினருக்கு மொத்தம் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் மொத்த இட ஒதுக்கீட்டு வரம்பு உச்ச நீதிமன்றம் அனுமதித்த 50 விழுக்காட்டைத் தாண்டிவிட்டதாகக் கூறி உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
இதனால் நீதிமன்றத்தால் தடுக்க முடியாதபடி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி குர்ஜார் இனத்தவர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments