காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

0 23060
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கழுத்தை அறுத்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கழுத்தை அறுத்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவைச் சேர்ந்த வரலட்சுமி இண்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த அகில் என்பவன் வரலட்சுமியைக் காதலிப்பதாகக் கூறித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் உறவினரின் திருமணத்தில் பங்கேற்க சாய்பாபா கோவிலுக்கு வரலட்சுமி சென்றதை அறிந்த அகில் அங்குச் சென்றுள்ளான்.

தனியாக இருந்த வரலட்சுமியிடம் தகராறு செய்த அகில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைத் திடீரென எடுத்து அவர் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

தகவல் அறிந்த காவல்துறையினர் வரலட்சுமியின் உடலைக் கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments