இந்த ஆண்டு நவராத்திரி காலகட்டத்தில் கார் விற்பனை அமோகம்!

0 1531
இந்த ஆண்டு நவராத்திரி காலகட்டத்தில் கார் விற்பனை அமோகம்!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நவராத்திரி காலகட்டத்தில் கார் விற்பனை சுறுசுறுப்புடன் நடந்ததாக முன்னணி கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, நவராத்திரியின் போது சுமார் 96 ஆயிரத்து 700 கார்களை விற்று 27 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஹுண்டாய் நிறுவனம் 26 ஆயிரத்து 68 கார்களை விற்றுள்ளது இது கடந்த ஆண்டு நவராத்திரி விற்பனையை விட 28 சதவிகிதம் அதிகமாகும்.

டாடா மோட்டார்ஸ்  10 ஆயிரத்து 887 கார்களை விற்று 90 சதவிகித வளர்ச்சியை காட்டியுள்ளது. கியா மோட்டாரை பொறுத்தவரை 11 ஆயிரத்து 640 வாகனங்களை விற்று 224 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே போன்று டொயோட்டா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் நவராத்திரி காலத்தில் அதிக கார்களை விற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments