தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 34574
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த, 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments