அமெரிக்காவில் டிரம்பின் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்ற 700 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல்

0 1446
அமெரிக்காவில் டிரம்பின் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்ற 700 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், டிரம்ப் நடத்திய 18 கூட்டங்கள் வாயிலாக கொரோனா தொற்று ஏற்பட்டு 700 க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வில், டிரம்பின் தேர்தல் கூட்டங்களால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடந்த இந்த கூட்டங்கள் வாயிலாக இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டுவிட் செய்துள்ள ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், டிரம்ப், தமது ஆதரவாளர்கள் உள்பட யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை என விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments