புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டாயம் - தேசிய மருத்துவ ஆணையம்

0 2219
புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டாயம் - தேசிய மருத்துவ ஆணையம்

புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க 300 படுக்கைகள் கொண்ட  மருத்துவமனை இருப்பது கட்டாயம் என, புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் தனது முதல் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் சேர்ந்த மருத்துவமனைகள் இருக்க குறைந்தது 5 ஏக்கர் நிலமிருக்க வேண்டுமென விதி இருந்தது. தற்போது அதை நீக்கி, குறைந்தது 2 ஆண்டுகளாவது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருந்திருக்க வேண்டியது கட்டாயமென கூறியுள்ளது.

இந்த உத்தரவானது, புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க விண்ணப்பித்தோருக்கும்,  2021-22ம் கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் மின்னனு முறை மூலம் பயிற்றுவிக்கும் வசதி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஸ்கில் லேபரேட்டரி எனப்படும் ஆய்வுக்கூடம்  கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments