வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள்... தஞ்சமடைந்த காதல் ஜோடியால் சிக்கிய இளைஞர்கள்!

0 3042

கோவையில் காதலர்களுக்கு தஞ்சம் கொடுத்த வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது, 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக பிடிபட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தன் காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் வசிக்கும் தன் நண்பர் ராகவேந்திரன் வீட்டில் தஞ்சமைடந்துள்ளார். பெண் வீட்டார் தங்கள் மகளை காணவில்லை என்று போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, சேரன்மாநகரிலுள்ள ராகவேந்திரன் வீட்டுக்கு போலீஸார் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டில் யாருமில்லாததால், பூட்டை உடைத்து சோதனையிட்டுள்ளனர். வீட்டுக்குள் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு 4 கட்டுகள் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். வீட்டிலிருந்த 7.5 லட்ச ரூபாய் மதிப்புக்கு கள்ள நோட்டுகளையும் போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து, வீட்டில் தங்கியிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த தீட்சித் மற்றும் புதுக்கோட்டையே சேர்ந்த ராகவேந்திரனை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லமால் தவித்து வந்தாகவும், அதனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெப் டிசைனிங் உதவியுடன் தயாரித்ததை ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் ரஞ்சித் புதுக்கோட்டையிலிருந்து தனது காதலியை அழைத்து கொண்டு கோவை வர, காதல் ஜோடிக்கு தங்கள் வீட்டில் தஞ்சம் அளித்துள்ளனர்.

காதல்ஜோடிக்கு தஞ்சமளித்ததால், போலீஸ் வீட்டை சோதனையிட கள்ளநோட்டு தயாரித்த இளைஞர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர். காதல் ஜோடிக்கு கள்ள நோட்டு விவகாரத்தில் தொடர்பு இல்லாத காரணத்தினால் ரஞ்சித்தும் அவரின் காதலியும் புதுக்கோட்டை போலீஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments