தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு, சுமார் 8,800 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆன்டிரிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு

0 1056
தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு, சுமார் 8,800 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆன்டிரிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு

செயற்கைக்கோள் ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நிறுவனமான தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு, சுமார் 8,800 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்டிரிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு  வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்காக கடந்த 2005 ல் செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைத்து, விண்ணில் செலுத்தி, அதை இயக்கும் ஒப்பந்தம் ஆன்டிரிக்ஸ் கார்ப்பரேஷனுடன் போடப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை  2011 ல் ஆன்டிரிக்ஸ் ரத்து செய்ததை தொடர்ந்து தேவாஸ் சார்பில் அமெரிக்க நீதிமன்றம் உள்பட பல நடுவர் மன்றங்களில் தேவாஸ் தொடர்ந்த வழக்கில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments