வியட்நாமில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 35 பேர் பேர் உயிரிழப்பு

0 402
வியட்நாமில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 35 பேர் பேர் உயிரிழப்பு

வியட்நாமில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், மீண்டும் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

டிரா வான் மற்றும் டிராங் லெங் ஆகிய கிராமங்களில் நேற்று ஏற்பட்ட மண்சரிவால் ஏராளமான வீடுகள் புதைந்தன. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments