ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் சென்னை அணி வெற்றி

0 3582
ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் சென்னை அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் நிதிஷ் ராணா அதிரடியாக ஆடினார். 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் ராணா 87 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில், சிறப்பாக ஆடிய இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 72 ரன்களை சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடி ஜடேஜா 31 ரன்களை குவிக்க, 20வது ஓவரின் கடைசி பந்தில் சென்னை அணி இலக்கை எட்டியது. இதன் மூலம் கொல்கத்தா அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments