சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

0 518
சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

நமது நாட்டில் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7 புள்ளி 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த கருத்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கூறியுள்ளது.

நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுவதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதுதொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், அது போல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டம் தெரிவிப்பதாக, குறிப்பிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments