9 மாவட்டங்களில் கனமழை!!!! வானிலை மையம் எச்சரிக்கை

0 27564
9 மாவட்டங்களில் கனமழை!!!! வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் 18 செண்டி மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகம் அருகே 14 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. செங்குன்றத்தில் 13 செண்டி மீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் 11 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 12 செண்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானலே, மிக கனமழை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடைவெளி விட்டு சென்னையில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments