கோவையில் அதிகளவில் சொத்து வரி நிலுவைத் தொகை வைத்திருக்கும் 100 பேரின் பட்டியல் வெளியீடு

0 1681

கோவையில் சொத்து வரி செலுத்த தவறி, அதிகளவில் நிலுவைத் தொகை வைத்திருந்த நூறு பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மாநகரில் இயங்கி வரும் பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக சொத்து வரி செலத்தாமல் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத நிறுவனங்கள் எனக் கூறி எஸ்.என்.ஆர்.சன்ஸ் குழுமம், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் உட்பட 100 பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அவர்களுக்கான குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments