பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படுமா ?.. மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 2058

பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் விற்பனை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொது மக்களிடையே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகைக் காலத்திற்கான தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments