அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0 371
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர்கள், பதவியில் இருந்து விலகிய பின்னரும் அரசு பங்களாக்களில் வசித்தது சட்ட விரோதம் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதனால் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு தடைகோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஃப் நாரிமன் தலைமையிலான அமர்வு ரமேஷ் பொக்ரியால் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments