தமிழகத்தில் இன்று 2708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு..!

0 3610
தமிழ்நாட்டில் இன்று 2708 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில், 3 - வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 708 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், 4 ஆயிரத்து 14 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், 32 பேர் உயிரிழந்தனர். சென்னையில், புதிதாக 747 பேருக்கு  வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி  செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக,கோயம்புத்தூரில் 253 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments