இந்தியாவின் காற்று மண்டலம் குறித்து விமர்சித்த டிரம்பிற்க்கு, நட்பு நாடுகளை நடத்தும் முறை இது தானா என ஜோ பைடன் கேள்வி

0 1459
இந்தியாவின் காற்று மண்டலம் குறித்து விமர்சித்த டிரம்பிற்க்கு, நட்பு நாடுகளை நடத்தும் முறை இது தானா என ஜோ பைடன் கேள்வி

இந்தியாவின் காற்றுமண்டலம் அசுத்தமாக உள்ளது என கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

இது தான் நட்பு நாடுகளை நடத்தும் விதமா என டிரம்புக்கு அவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். பூமி வெப்பமாதல் பிரச்சனைக்கு தீர்வு காண இப்படி பேசினால் முடியுமா என்றும் ஜோ பைடன் வினவியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஜோ பைடனுடன் நடந்த விவாதத்தில், வெப்பமடைதல் பிரச்சனைக்கு தமது நிர்வாகம், எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பேசும் போது, டிரம்ப், இந்தியாவில் காற்று மண்டலம் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments