அணு ஆயுத தடை ஒப்பந்தம் விரைவில் அமல்- ஐநா சபை தகவல்

0 1274
அணு ஆயுத தடை ஒப்பந்தம் விரைவில் அமல்- ஐநா சபை தகவல்

அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் சர்வதேச ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனை, தயாரிப்பு, இருப்பு வைத்தல், ஏற்றுமதி, பயன்பாடு ஆகியவற்றை தடை செய்யும் ஒப்பந்தம் 2017ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர 50 நாடுகளின் அங்கீகாரம் தேவை என்ற நிலையில் 49 நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தன.

தற்போது 50வது நாடாக ஹோண்டுராஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரும் ஜனவரியில் இந்த சர்வதேச ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட அணு ஆயுத வலிமைமிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments