அடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- மகேந்திர சிங் டோனி உறுதி

0 5120
அடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி உறுதி

ஐ.பி.எல்.போட்டிகளின் அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்று மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

மும்பை அணியுடனான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தோல்வி வலிக்கிறது, எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும் என்றார்.

இந்த சீசன் சென்னை அணிக்கான ஆண்டாக அமையவில்லை என்ற அவர், அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்றார். அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த மூன்று போட்டிகளிலும் தான் விளையாட உள்ளதாகவும், அடுத்துவரும் மூன்று போட்டிகளில் சிறந்ததை கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments