காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நினைவுச் சின்னத்தில் மரியாதை

0 878
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள அலுவலக வளாகத்தில், டிஜிபி ஜே.கே.திரிபாதி, முப்படை உயர் அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மேலும், வீர மரணமடைந்த காவலர்களுக்கு 144 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டி.ஜி.பி. திரிபாதி, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 65 காவலர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments