7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 778
7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவை நீர்த்துப் போக செய்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக செய்து விடக்கூடாது என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments