அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் தைவான் மீது படையெடுக்க சீனா திட்டம்.!

0 5854
அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் தைவான் மீது படையெடுக்க சீனா திட்டம்.!

அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் தைவான் மீது படையெடுக்க சீனா தயாராவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவின் தென் கிழக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள தைவான் மீது ஆதிக்கம் செலுத்த பல காலமாக சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், போருக்கு தயாராகும் படி ராணுவ வீரர்களை சீன அதிபர் ஜின்பிங், அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தைவானை ஒட்டிய கடல் பகுதியில், தொலைதூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்த அதி நவீன DF-17 hypersonic ஏவுகனைகளை சீன கடற்படை குவித்து வருவதாக செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம், 40 முறைக்கு மேல் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றம் சாட்டிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments