ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை ?

0 9167
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை ?

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற அந்த நபர், செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய விஜயகுமார், அதில் பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார், 2 நாட்களுக்கு முன் தனது உறவினர்கள் இருவருக்கு வாட்சப்பில் குரல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தனக்கு கடன் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும் எனவே வாழப் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய விஜயகுமாரின் எரிந்த நிலையிலான சடலம் நத்தமேடு ஏரிக்கரையில் கிடந்துள்ளது. அதனை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments