திமுக நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய செல்போன்

0 2822
திமுக நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய செல்போன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மர்மநபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில், சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனால் திமுக நிர்வாகி உயிர் தப்பினார்.

நாராயணபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலாயுதம், பணி நிமித்தமாக திம்மாம்பேட்டைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததில் படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். சட்டைப்பையில் இருந்த செல்போன் வெடித்ததில் தான் வேலாயுதம் படுகாயமடைந்ததாக கருதப்பட்ட நிலையில், செல்போனை ஆய்வு செய்த போது அதில் நாட்டுத்துப்பாக்கிக் குண்டின்  2 துண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் மர்மநபர்கள் வேலாயுதத்தை துப்பாக்கியால் சுட்டதும், அந்த குண்டு செல்போனில் பட்டு சிதறி அவரின் தாடை, தலை, வயிற்றுப்பகுதியில்  துளைத்து காயம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

அரசியல் முன்விரோதத்தால் துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்ற கோணத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments